Monday, 25 April 2016

கவிஞனடி



அழகு மங்கையே
உனை கவிவடித்தால்
உச்சியிலிருந்து 
உள்ளங்கால் வரை சொல்லாமே
ஒராயிரம் வார்த்தை தேவையடி
முடிந்து விட்டால் - நான்
கவிஞனடி......

வலி

அயல் நாட்டில் இருக்கும் நண்பன் 

இன்று உலகில் எவ்வளவோ தொடர்பு சாதனங்கள் இருக்கும் போது  
இவன் தனது தாய்க்கு அயல் நாட்டில் இருந்து கடிதம் எழுதுகின்றான் ✉️✉️✉️✉️

அம்மா நீங்கள் நலமா? நான் இங்கு எந்த குறையும் இன்றி வாழ்கின்றேன்   நீங்கள் உங்கள் உடம்பை கவனமாக பாருங்கள் நேரத்துக்கு சாப்பிடுங்கள் ஏதும் காசு தேவை என்றால் சொல்லுங்க போட்டு விடுறன் அப்பா இல்லை என்ற குறை இருக்க கூடாது தம்பி என்ன செய்கின்றான் அவன் கேட்பது எல்லாம் வாங்கி கூடுங்க அவன் எப்பவும் சந்தோசமா இருக்கனும் மற்றது உறவினர்கள் எல்லோரும் நலம் தானே அதோட நான் இந்த கடிதம் போடுவது என் ஞாபகமா உங்களிடம் இது இருக்கட்டும் என்று இதே போல் எனக்கும் கடிதம் போட்டு விடுங்க அம்மா சரியா😌😌😌😌

இதை அங்கு தாய் படிக்கின்றாள் பாவம் பதில் எழத தெரியாது  அவள் இவனது தம்பியை கேட்கின்றாள் 
அவனோ வேணும் என்றால் குறுஞ்செய்தி அனுப்பி விடுகின்றேன் எனக்கு நேரம் இல்லை என்றான்

கலங்கத்துடன் தாய் 😭😭😭😭
வெற்று தாள் அனுப்புகிறாள்

அவனோ இங்கே தாயின் கடதாசி எதிர்பார்த்து இருக்கிறான்📩📩📩📩

கடிதமும் வந்தது பிரித்து பார்த்தவன் கண்களில் கண்ணீர்  இரண்டு தாள்கள் இரண்டிலும் எதுவும் இல்லை 

அவன் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி அழுதான் தாய் காரணம் கேட்க இரண்டு பக்கங்களிலும் எழுத முடியாத பாசம் வைத்துள்ளியே அம்மா என்று சொல்லி அழுதான்

தன் தம்பி எழுதி கூடுக்காதது தெரியாமல் அவனும் அவன் தம்பி எழுதி கூடுக்காதது தெரிந்து தாயும் கலங்கினாள்

அவனோ தினமும் அந்த தாளை தனது தலையனைக்கு கீழ் வைத்து தூங்கி கொண்டிருக்கிறான்😭😭😭😭..............


பாட தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

கவி எழுத தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

ஆட தெரியாது ஆனால் 
முயற்சிக்கிறேன்

வீரமாக பேச தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

எதுவுமே தெரியாது என்று கோளை என்று 
நினைத்து விடாதீங்க

முயற்சித்து கொண்டே இருக்கிறேன் 
அதனால் நான் வீரன்


மனசு


மன்னிக்க தெரிந்தும்
மறக்க தெரியவில்லை உனை
மனத்தைரியம் இல்லாததாலோ
மனதே நீயாக இருப்பதாலோ.......


வெறுப்பு


இறைவா!!

என்னை புன்னகையோடு வாழவிடு
இல்லையேல் புதைகுழியை காட்டுவிடு
அதை நிரப்புகிறேன் தமிழன் நான்..
மகிழ்ச்சியாக..


உணர்ச்சி


உச்சி வெயிலில் 
இருவரும் நடக்கையில்
உன் கை படுகையில்
பனிமழை பொழிவதுபோல்
தோன்றுகிறதடி.....


நினைவு


இறுதி யுத்தத்தில் முடிந்தது
ஈழகாதல்கள் இன்னும் தொடர்கின்றது 
அதன் நினைவுகள்
ஈழ கனவு போல்.........