Monday, 25 April 2016

வேதனை


வெளிநாடும் வேதனை.
தாய்நாடும்வேதனை.

வெளிநாடு வந்தவனுக்கும் வேதனை.
வெளிநாடு வராதவனுக்கும் வேதனை.

வட்டிகாசு கட்டுவதில் வேதனை.
வட்டிக்கு வேண்டாமல் வேதனை.

வேலை இல்லாமல் வேதனை.
வேலை இருந்தும் வேதனை.

செல்வம் இருந்தும் தனிமை வேதனை.
குடும்பம் இருந்தும் வறுமை வேதனை.

தாய்மொழி பேச முடியாத வேதனை.
தாய்மொழி பேச முடிந்தும் வேதனை.

வெளிநாட்டிலே அகதி என வேதனை.
தாய்நாட்டிலே அகதி என வேதனை.

வேதனை வேதவாக்கு ஆகிவிட்டது,
வெல்வோம் ஓரு நாள்.........



No comments:

Post a Comment