Monday, 25 April 2016

கவிஞனடி



அழகு மங்கையே
உனை கவிவடித்தால்
உச்சியிலிருந்து 
உள்ளங்கால் வரை சொல்லாமே
ஒராயிரம் வார்த்தை தேவையடி
முடிந்து விட்டால் - நான்
கவிஞனடி......

வலி

அயல் நாட்டில் இருக்கும் நண்பன் 

இன்று உலகில் எவ்வளவோ தொடர்பு சாதனங்கள் இருக்கும் போது  
இவன் தனது தாய்க்கு அயல் நாட்டில் இருந்து கடிதம் எழுதுகின்றான் ✉️✉️✉️✉️

அம்மா நீங்கள் நலமா? நான் இங்கு எந்த குறையும் இன்றி வாழ்கின்றேன்   நீங்கள் உங்கள் உடம்பை கவனமாக பாருங்கள் நேரத்துக்கு சாப்பிடுங்கள் ஏதும் காசு தேவை என்றால் சொல்லுங்க போட்டு விடுறன் அப்பா இல்லை என்ற குறை இருக்க கூடாது தம்பி என்ன செய்கின்றான் அவன் கேட்பது எல்லாம் வாங்கி கூடுங்க அவன் எப்பவும் சந்தோசமா இருக்கனும் மற்றது உறவினர்கள் எல்லோரும் நலம் தானே அதோட நான் இந்த கடிதம் போடுவது என் ஞாபகமா உங்களிடம் இது இருக்கட்டும் என்று இதே போல் எனக்கும் கடிதம் போட்டு விடுங்க அம்மா சரியா😌😌😌😌

இதை அங்கு தாய் படிக்கின்றாள் பாவம் பதில் எழத தெரியாது  அவள் இவனது தம்பியை கேட்கின்றாள் 
அவனோ வேணும் என்றால் குறுஞ்செய்தி அனுப்பி விடுகின்றேன் எனக்கு நேரம் இல்லை என்றான்

கலங்கத்துடன் தாய் 😭😭😭😭
வெற்று தாள் அனுப்புகிறாள்

அவனோ இங்கே தாயின் கடதாசி எதிர்பார்த்து இருக்கிறான்📩📩📩📩

கடிதமும் வந்தது பிரித்து பார்த்தவன் கண்களில் கண்ணீர்  இரண்டு தாள்கள் இரண்டிலும் எதுவும் இல்லை 

அவன் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி அழுதான் தாய் காரணம் கேட்க இரண்டு பக்கங்களிலும் எழுத முடியாத பாசம் வைத்துள்ளியே அம்மா என்று சொல்லி அழுதான்

தன் தம்பி எழுதி கூடுக்காதது தெரியாமல் அவனும் அவன் தம்பி எழுதி கூடுக்காதது தெரிந்து தாயும் கலங்கினாள்

அவனோ தினமும் அந்த தாளை தனது தலையனைக்கு கீழ் வைத்து தூங்கி கொண்டிருக்கிறான்😭😭😭😭..............


பாட தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

கவி எழுத தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

ஆட தெரியாது ஆனால் 
முயற்சிக்கிறேன்

வீரமாக பேச தெரியாது ஆனால்
முயற்சிக்கிறேன்

எதுவுமே தெரியாது என்று கோளை என்று 
நினைத்து விடாதீங்க

முயற்சித்து கொண்டே இருக்கிறேன் 
அதனால் நான் வீரன்


மனசு


மன்னிக்க தெரிந்தும்
மறக்க தெரியவில்லை உனை
மனத்தைரியம் இல்லாததாலோ
மனதே நீயாக இருப்பதாலோ.......


வெறுப்பு


இறைவா!!

என்னை புன்னகையோடு வாழவிடு
இல்லையேல் புதைகுழியை காட்டுவிடு
அதை நிரப்புகிறேன் தமிழன் நான்..
மகிழ்ச்சியாக..


உணர்ச்சி


உச்சி வெயிலில் 
இருவரும் நடக்கையில்
உன் கை படுகையில்
பனிமழை பொழிவதுபோல்
தோன்றுகிறதடி.....


நினைவு


இறுதி யுத்தத்தில் முடிந்தது
ஈழகாதல்கள் இன்னும் தொடர்கின்றது 
அதன் நினைவுகள்
ஈழ கனவு போல்.........


இரவு காதல்



இரவிலே தூங்குகிறேன்
இறுதியாக உனை நினைத்தபடி
கனவிலாவது வந்து விடு
காதலிக்க.........

காதல்



ஆழிபேரலையின் போது
அழிந்த காதல்
ஆழ்கடல் போன்று
ஆழமான ஞாபகமாய் உள்ளது...

வெளிநாட்டு வெண்ணிலவு


காலைப்பொழுதினிலே
வெயில் காலம் அது
வேகமாக புறப்பட்டான் நண்பன்
சூரியனை தரிசிக்க
அதிலும் வேகமாக புறப்பட்டேன்
என் வெண்னிலவை பார்க்க
வெள்ளைக்காரன் வோக்கிங் போக
வேலைக்கு போறவன் வேகமாக போக
வேகமாக நடந்தேன் நானும்
வெண்னிலவின் வீட்டை நோக்கி
அவசரமாக  வெளியே வந்த வெண்னிலவு
வெள்ளைக்கார நண்பியோடு 
வேகமாக சென்றுவிட்டாள் பஸ்ஸில் ஏறி..
வேதனையாக திரும்பினேன்.........

                   (சும்மா எழுதி பார்த்தன்)


அனாதை


அம்மா, அப்பா இருந்தும்,
அனாதையாய் வாழும்.
ஒருவருக்கு தெரியும்
உச்ச வலியின் வடுக்கள்....


வேதனை


வெளிநாடும் வேதனை.
தாய்நாடும்வேதனை.

வெளிநாடு வந்தவனுக்கும் வேதனை.
வெளிநாடு வராதவனுக்கும் வேதனை.

வட்டிகாசு கட்டுவதில் வேதனை.
வட்டிக்கு வேண்டாமல் வேதனை.

வேலை இல்லாமல் வேதனை.
வேலை இருந்தும் வேதனை.

செல்வம் இருந்தும் தனிமை வேதனை.
குடும்பம் இருந்தும் வறுமை வேதனை.

தாய்மொழி பேச முடியாத வேதனை.
தாய்மொழி பேச முடிந்தும் வேதனை.

வெளிநாட்டிலே அகதி என வேதனை.
தாய்நாட்டிலே அகதி என வேதனை.

வேதனை வேதவாக்கு ஆகிவிட்டது,
வெல்வோம் ஓரு நாள்.........



கருவிழி



காலைப்பொழுதினிலே
கதிரவன் மெல்ல வருகையிலே
கண் விழித்த மங்கையவள்
கதவோரத்தால் கதிரவனை பார்க்கையில்
கரு விழிகள் ஒளியால்
கதிரவன் மறைகின்றான்....


Sunday, 24 April 2016


தடி பிடிக்கும் முதியோரோ,
தானாக செல்கிறார்கள்.
இளையோர்களோ,
போதையில் தடுமாற்றம் காண்கிறார்கள்.




கவி எழுத தெரிந்தும்,
காதலிக்க விருப்பம் இல்லை பெண்ணை
நான் காதலிப்பது தமிழை.
அவளே என் காதலி......




உலகம்


பஸ்ஸில் நிற்கின்றாள் 
கர்ப்பிணி பெண்
காதலலுடன் இருக்கின்றாள்
யுவதி....
    ( இரண்டும் பெண்)

தூரதரிசனம்



 ஆலயத்தை 
தூரத்திலிருந்து தரிசிக்கலாம்.
நீயோ தூரதரிசனம்
தரமறுக்கிறாயே....



உன் கருவிழி பார்வையில்
கருகினார்களே..
ஏனோ என்னை
காதலித்தாய்....



உன்னை இரசித்தேன்
உதாசினப்படுத்தி விட்டாய்
இயற்கையை இரசித்தேன்
இனிமையாக அமைகிறது...


பள்ளிக்காலத்திலோ..  நீ
வண்ணமான பட்டாம்பூச்சியாய்..
இரசித்த பாவினான்..
பாமரன் ஆகிவிட்டேன்.....


அடுக்கு மாளிகையிலும்
விக்கிரங்கள் தேவை 
இல்லையேல்
அதுவும் பாழடைந்த ஆலயமே.......

விக்கிரம்(அம்மா,அப்பா)



மனதை கொன்ற மங்கையே...
புள்ளி மானோடு பேசுகையிலும்..
மனதில் புல்லரிக்குதடி...
உன் ஞாபகம்....




அடியே பெண்ணே ...
என் மூச்சுகாற்றும் சொல்கிறதடி..
உன் பெயரதை  -நீயா...
மறந்தாய் எனை...

Saturday, 23 April 2016

முகமலர்வு




அழகே நீ சிரித்தாலே..
பூக்கள் வாடுகிறது..
பயத்தில்தன்னை விட ..
அழகான உன் முகமலர்வில்....

 

உதடு.










பள்ளிப் பெண்ணே..!!
பாடசாலையிலே...
தேன்சிந்தும் உன் உதடுகளால்...
பாடமாகியது தேவாரம்.... எனக்கு

அழகியடி...



 கருத்தநீர் பாயும் நீர்வீழ்ச்சியடி,
உன் கருங்கூந்தல் அன்பே...
பௌர்ணமி முழு நிலவடி,
உன் முகம் அன்பே....
வானவில் போன்றதடி,
உன் நெத்தி அன்பே...
காண்பரிது மூன்றாம் பிறையடி,
உன் கண்புருவங்கள் அன்பே....
கூரிய வாள் போன்றதடி,
உன் கண்கள் அன்பே...
என் முத்தத்தின் முட்டுக்கட்டையடி,
உன் மூக்கு அன்பே....
என் நாவிற்கு வழி தருவதடி,
உன் உதடுகள் அன்பே...
இதை சொல்ல தெரியவில்லையடி,
அதுவே உன் இடைகள் அன்பே...
பல மணிநேரம் பம்பரம் சுத்துமடி,
உன் தொப்பையினுள் அன்பே....
நார்கள் அற்ற வாழைத்தண்டடி,
உன் தொடைகள் அன்பே....
பாலைவனத்திலும் மழையடி,
உன் பாதம் பட்டால் அன்பே...
முழுமையா சொல்லவாடி,
தமிழில் வார்த்தை இல்லையடி,
உனை சொல்ல அன்பே.....

கவிதைகள்

















வீதியில் புன்னகைத்து விடாதே..
வீரர்களோடு தேவர்களும்..

காத்திருக்கிறார்கள்..

உன் புன்னகைக்கு..

Thursday, 21 April 2016

என்விருப்ப பாடல்கள்

வெண்மதி வெண்மதியே நில்லு.........

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை......

அவள் என்னை என்னை தேடிவந்த அஞ்சல.....

"சிரிப்பு"